சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் பசுமை நடையின் விருட்சத்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது குறித்த பதிவை கீழ்க்காணும் சுட்டியில் பார்க்கலாம்:
சென்ற முறை ஒரு பெருவிருட்சத்தை கொண்டாடிய பசுமை நடை இந்த முறை பெரும்பாறைகளை கொண்டாடுகிறது. நமது வரலாற்றை நமக்கு கொஞ்சமேனும் உண்மையோடு எடுத்து வந்து சேர்த்தது பாறைகள் தாம். புத்தகங்களோ காப்பியங்களோ புனைவுகள் என்று கருதினாலும் பாறைகளில் பொதிந்துள்ள கல்வெட்டுகளும் ஓவியங்களும் நமக்கு பல்வேறு காலகட்டங்களின் நினைவுகளை மாற்றங்கள் இன்றி சொல்கின்றன.
பசுமை நடையின் பாறைத்திருவிழா இந்த முறையும் கீழக்குயில்குடி சமணமலையின் அடிவாரத்தில் உள்ள பெருமரங்களின் நிழலில் நடைபெறும். ஞாயிறு காலை ஆறு முப்பது மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்வு மதிய உணவோடு முற்றுப்பெறும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை. காலை உணவு, தேநீர், மற்றும் மதிய உணவு வழங்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் காலை 7 மணிக்கு முன் கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்துக்கு வந்து பதிந்து கொள்ள வேண்டியது மட்டும் தான்.
இந்த முறை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்கள், முனைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
அழைப்பிதழ் இங்கே:
அனைவரும் வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.