தல்லாகுளம் ஆறுமுகம் பரோட்டா கடை

மதுரை தல்லாகுளம் அனைவருக்கும் ரொம்பவும் தெரிந்த இடம்தான்.. மூன்று புகழ்பெற்ற உணவகங்கள் இங்கு உள்ளன. உங்கள் அனைவருக்கும் தெரிந்த அம்மா மெஸ், குமார் மெஸ், மற்றும் சந்திரன் மெஸ் போன்றவை இருக்கும் இடத்தில் தான் இன்னொரு அருமையான பரோட்டா கடை உள்ளது.

மதுரை அவுட்போஸ்ட்டில் இருந்து தல்லாகுளம் நோக்கி சென்றால், தல்லாகுளம் பெருமாள் கோவில் தாண்டிய பிறகு இடது புறம் சந்திரன் மெஸ் வரும். அதற்கு சற்று முன்னே ரோட்டின் ஓரத்தில் சற்றே புகை மண்டி காணப்படும் கடை தான் ஆறுமுகம் பரோட்டா கடை. பார்க்க சுமாராய் இருந்தாலும், இந்த கடையின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் போய் சாப்பிட வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சென்ற முறை என் நண்பன் விக்னேஷ் மதுரை வந்த போது அங்கு சென்று உணவு அருந்தினோம். கறிதோசை சாப்பிட வேண்டும் என்று கோனார் கடைக்கு செல்ல ஆசைப்பட்டான். நான் ஆறுமுகம் கடையில் கறிதொசை நன்றாக இருக்கும் என்று அழைத்துச்சென்றேன்.

ஆறுமுகம் கடை ரோட்டின் மேல் இருப்பதால், அருகே இருக்கும் காலி இடத்தில் மேஜை போட்டு பரிமாறுவார்கள். நாங்கள் சென்ற போது இடமில்லை. அப்போது தான் விக்னேஷ் உள்ளே இடமிருப்பதை சுட்டிக் காட்டினான். இவ்வளவு நாள் நான் அதை கவனித்ததேயில்லை. உள்ளே சென்றால் குடும்பத்தோடு சிலர் உணவருந்திக் கொண்டு இருந்தனர். குளிர்சாதன வசதி இல்லை. யாருக்கு வேண்டுமது?

நாங்கள் மெல்ல பரோட்டாவில் இருந்து ஆரம்பித்தோம். தலைக்கு இரண்டு பரோட்டாக்கள், பிறகு ஒரு கறிதோசை சொன்னோம். தொட்டுக்கொள்ள மட்டன் சுக்காவும். கறிதொசை வரும்வரை பரோட்டா சாப்பிட்டோம். நீங்கள் சென்றால் பரோட்டாவிற்கு ஊற்றிக்கொள்ள மிளகு குழம்பு வாங்கிக்கொள்ளுங்கள். அருமையான குழம்பு அது.

பிறகு கறிதோசை வர இருவரும் ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டோம். கோனார் கடை கறிதோசையை விட சுவையாகவே இருந்தது. கோனார் கடை சிறிய கடையாய் இருந்தபோது உண்ட கறிதொசை சுவை இப்போது “Multi-cuisine restaurant” ஆன பிறகு இருப்பதில்லை. ஆறுமுகம் கடை அன்றும் சரி இன்றும் சரி ஒரே சுவைதான். விலையும் கோனார் கடையோடு ஒப்பிடும் போது குறைவே.

Karidosai 

நன்கு வெந்த இளம் ஆட்டுக்கறி முதல் கடி கடிக்கும் போதே தெரிந்துவிடும். பதம் மிகவும் முக்கியம். கறிதோசையில் பெரிய துண்டுகள் போட்டால் சுவை கேட்டு விடும். சுக்காவிற்கு மிதமான அளவில் துண்டுகளும் கறிதோசைக்கு சிறுதுண்டுகளுமாய் அருமையாய் இருந்தது சுவை.

Mutton Sukka

கறிதோசை முடித்து விட்டு மறுபடி பரோட்டாவிற்கு வந்தோம். கலக்கி வேண்டும் என்று இரண்டு கலக்கி சொன்னோம். மதுரையில் அதை கலக்கி என்று பெரும்பாலும் சொல்வதில்லை. வழியல் என்றே சொல்வார்கள். ஆம்லெட்டும் இல்லாது ஆப்பாயிலும் இல்லாத முட்டை பதார்த்தம் அது. உண்டு பார்த்தால் தெரியும் அருமை.

Kalakki

அனைத்தையும் உண்டு முடித்து விட்டு வெளியே வந்து பில் கேட்டோம். 340 ரூபாய் என்றார்கள். பரோட்டா பத்து ரூபாய், கறிதோசை தொண்ணூறு ரூபாய்கள், சுக்கா எண்பத்தி ஐந்து ரூபாய்கள், கலக்கி பத்து ரூபாய். வேறு எங்கேனும் சாப்பிட்டு இருந்தால் 500க்கு மேல் ஆகியிருக்கும். எடுத்துக் கொடுத்து விட்டு திருப்தியாய் வெளியே வந்தோம்.

நீங்கள் சென்றால் என்னையும் அழைக்கவும்.. பயப்பட வேண்டாம்.. எனது செலவை நானே பார்த்துக்கொள்கிறேன்.

Smile

Advertisements

16 thoughts on “தல்லாகுளம் ஆறுமுகம் பரோட்டா கடை

 1. “எனது செலவை நானே பார்த்துக்கொள்கிறேன்.”

  எங்க செலவையும் நீங்க பார்த்துகிட்டா இன்னும் வசதியாக இருக்கும்

 2. தல்லாகுளம் ஆறுமுகம் பரோட்ட கடையிலேயே போய் ரசித்து சாப்பிட்டது போல் இருக்கிறது, இந்த பதிவை படித்து முடிக்கையில் 🙂

  • அடுத்த வெளியூர் உணவு பற்றிய பதிவு அநேகமாய் விருதுநகர் பர்மா கடை அல்லது கோபால்பட்டி தவ்பீக் பிரியாணியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். 🙂

   • உங்க பதிவுகள் படித்தேன்,நன்றாக இருக்கு,நிறைய மதுரை பற்றியும் பயணங்கள் பற்றியும் எழுதுங்க,உங்கள் இமெயில் ஐடி போன் நம்பர் என் karthoo2k@gmail.com ற்கு அனுப்பவும்,மதுரை வரும் போது சந்திக்கலாம்,நீங்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால் இனைக்கவும்.

   • நன்றி கார்த்திகேயன். கண்டிப்பாக எழுதுவேன். மதுரை வரும்போது நிச்சயம் சந்திக்கலாம். உங்களை பேஸ்புக்கில் இணைத்துக் கொள்கிறேன். 🙂

    பி.கு: தமிழில் அந்த அக்கன்னா எப்படி தட்டச்சு செய்தீர்கள்? 😀

 3. Pingback: பாலாஜி ஈவ்னிங் மட்டன் ஸ்டால் – மதுரை. | மதுரக்காரன்
 4. அருமையான எழுத்து நடை உங்களுக்கு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

  //உணவு அருந்தினோம்.//

  உணவு உண்டோம்.
  திரவத்தை அருந்தலாம், திடப்பொருளை அருந்தமுடியுமோ?

  • பின்னூட்டத்திற்கு நன்றி.

   உணவருந்தினோம் என்று தானே சொல்வோம்? திரவத்தை குடிக்கலாம். இரண்டுமே சரியாக வருகிறது. யாரேனும் விளக்கினால் விளங்கும். 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s