எதிர்வரும் ஞாயிறன்று நிகழவிருக்கும் பசுமைநடை 25: விருட்சத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு (நிகழ்வு நடைபெறும் இடம் வரைக்குமே) நேரடிப் பேருந்து வசதி உள்ளது. வழித்தட எண் 21C. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலையிலிருந்து மதியம் வரை பேருந்து கிளம்பும் நேரங்கள்: 05.35, 07.05, 07.15, 08.30, 10.05, 11.35, 12.55. (பத்து நிமிடங்கள் முன்பின் ஆகலாம்). கீழக்குயில்குடி சமணமலை கருப்பு கோயில் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
மற்றபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழியாகச் செல்லும் எந்தப் பேருந்திலும் வந்து நாகமலை புதுக்கோட்டையில் இறங்கினால் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமணமலைக்கு ஷேர்ஆட்டோ வசதி உண்டு.
அனைவரும் குடும்பத்தோடு வந்து பங்கேற்க வேண்டும் என்பதே எனது ஆசை.