அண்ணன் நிறைய காரியங்களில் பிசியாக இருக்கும் காரணத்தினால் பதிவு போட நேரம் இன்றி சுத்திக்கிட்டு இருக்கேன்.. இன்னும் ஒரு மாசம் இப்பிடி தான் போகும் போல.
நான் தற்போது செய்து கொண்டிருக்கும், பதிவில் பட்டியலிடக்கூடிய காரியங்கள் கீழே:
- பல் மருத்துவமனை ஒன்று
- பல் மருத்துவமனைக்கு ஒரு இணையதளம் ஒன்று உருவாக்குதல்
- பிள்ளை வளர்ப்பு
- வீட்டின் மாடியில் நூலகம் அமைத்தல்
- என்னிடம் உள்ள புத்தகங்களை பட்டியலிடுதல்
- மதுரை மலையேறும் குழுமம் தொடர்பான வேலைகள்
- வங்கிக்கடன் வாங்க அலைதல்
இதையெல்லாம் செய்து முடிக்க இன்னும் மூன்று வார காலங்கள் ஆகலாம்.. ஆனதுக்கு அப்பறம் மறுபடி வருவேன். அதுவரை மல்லிச்சூ..
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இல்ல புத்தாண்டு வாழ்த்து எல்லாம் சொல்லல. இங்கிலிஷ்காரன் புத்தாண்டுக்கு தமிழ் பதிவுல தமிழன் தமிழனுக்கு ஏன் வாழ்த்து சொல்லணும்? லூசுத்தனமா இல்ல?
எங்கள் பிள்ளைக்கு பெயர் வைத்தாயிற்று. அவன் பெயர் ஆதன் நிலவன். அவன் பிறந்த நட்சத்திரம் அசுவதி. தமிழ் நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அது. ஆதலால் ஆதன். அவன் முழுநிலவு ஒளி வீசிய ஒரு பௌர்ணமி நாள் இரவில் பிறந்ததால் நிலவிற்கு உரித்தானவன். ஆதலின் நிலவன். பெயர் நன்றாய் இருந்தால் சொல்லுங்கள். இன்னும் நிறைய பெயர்கள் கைவசம் உள்ளன.
மறுபடி ஒரு முக்கியமான் விஷயம்.. பொங்கலுக்கு முன் பதிவிடுவேனா என்பது கேள்விக்குறியாய் இருப்பதால், இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
எங்க ரொம்ப நாளா காணோமேன்னு நினைத்துக்கொண்டே உங்கள் வலைத்தளத்திற்கு வந்தால் இந்தப் பதிவு.
நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பணிகளும் இனிது நிறைவேற வாழ்த்துக்கள்.
குழந்தை ஆதன் நிலவனுக்கு வாழ்த்துகள்! (பிள்ளை வளர்ப்பு?)
வணக்கம் அம்மா,
ஆமா. ரொம்ப நாளா பதிவு போடவே முடியல. மற்ற பதிவுகள் படிக்க கூட முடியல. அவ்வளவு வேலை.
மேலே இருக்கும் வேலைகளில் கொஞ்சம் முடிச்சுட்டேன். கொஞ்சம் பெண்டிங்.
பிள்ளை வளர்ப்பு, பல் மருத்துவமனை, இணையதளம் எல்லாம் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது..
நூலகம், புத்தக பட்டியல் தேங்கி நிற்கிறது.
மெதுவா பண்ணலாம்.. புத்தகத்தால ஓட முடியாதுல்ல.. 🙂
அன்புடன்,
மதுரக்காரன்.
//ஆதலின் நிலவன். பெயர் நன்றாய் இருந்தால் சொல்லுங்கள். இன்னும் நிறைய பெயர்கள் கைவசம் உள்ளன.//
அருமையான பெயர். உங்கள் கைவசமுள்ள மற்ற பெயர்களை ஒரு புதிய இடுகையில் வெளியிட முடியுமா? என் மகனுக்காக நல்ல தூய தமிழ்ப் பெயர்களைத் தேடி வருகிறேன்.
பட்டியல் போடும் அளவுக்கு கம்மியான பெயர்களா தமிழில் உள்ளது?
அந்த பெயர்களை புத்தகமே போடலாம். ஏற்கனவே போட்டும் உள்ளார்கள் நம் ஈழ உறவுகள். தேடி எடுத்து சுட்டியை பகிர்ந்து ஒரு பதிவிடுகிறேன் விரைவில். 🙂
நண்பரே, அந்தப் பட்டியல்களெல்லாம் ஆல்ரெடி பார்த்து விட்டேன். அவை பழமை வாடையடிக்கின்றன. நான் தேடுவது கீழே உள்ள சுட்டியில் உள்ளது போன்ற பெயர்களை.
http://puretamilbabynames.wordpress.com/pure-tamil-baby-names-for-boys/
சொல்றேன் நண்பரே.. 🙂
உங்கள் email idயை எனக்கு rajanna.dr என்ற ஜிமெயில் முகவரிக்கு அனுப்பவும். 🙂