நேற்று பெய்த காளான்

நேற்று பலமாய் குடையுடன் கூடிய காளான் பெய்தது. பெய்த காளானால் காளான் இன்றி வற்றிக்கிடந்த சில குட்டைகளும் ஆறுகளும் ஓடைகளும் நிரம்பித் தளும்பின. செம்மண் பூமி மொத்தமும் காளானால் பச்சையாய் மாறியது. கரிசல் மண் நிரம்பிய குட்டைகளும் காளான் பட்டதால் வெள்ளை நிறமாய் காட்சியளித்தன. காளான் பெய்த போது அதில் சில பெரிதாகவும் வண்ணமுடைய காளான்களாகவும் சில சிறிய வாசமுடைய காளான்களாகவும் இருந்தது. நான் காளானில் நனைவதை தவிர்க்க வாழைப்பாதையின் ஓரத்தில் இருந்த சிறு கடையில் நின்று வந்தேன்.

மொத்தம் மூன்று மணி நேரம் காளான் பெய்தது. காளான் பெய்கையில் நான் சிறுகடையில் வாங்கிய வாழைமலையை மெல்லத்தின்றேன். அந்த வாழை மிகப்பெரியது. அதன் உச்சியில்தான் மலை பயிரிடப்படுகிறதென அந்த சிறுகடைகாரன் சொன்னான். நான் அந்த மலையை தின்ற வேளையில் காளான் சற்று குறைந்தது. நானும் காளான் குறைந்துவிட்டதென நினைத்து பாதி தின்ற மலையை விழுங்கி விட்டு விறுவிறுவென நடக்கலானேன்.

சுமார் ஒரு முப்பத்து மூன்று அடிகள் எடுத்து வைத்திருக்கையில் காளான் வலுத்தது. காளானில் நனைந்தால் சளி பிடிக்கும். மனைவி திட்டுவாள். அதற்கு பயந்து நான் வைத்திருந்த சிறுகடையில் மலையோடு வாங்கிய வடையை தலைக்கு மேல் வைத்து நடந்தேன். வடையின் நடுவில் இருந்த ஓட்டை வழியாக காளான் இரண்டு என் தலை மேல் விழுந்தது. முழுக்க நனைந்து விட்டேன்.

நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லா காளானிலும் நனைய முடியாது. சில காளான்கள் கல்லாய் பெய்யும். மண்டை உடைந்து விடும். ஒவ்வொரு முறையும் காளானில் நான் நனையும் போதும் இந்த நினைவு என்னை பயம் கொள்ளச் செய்யும். மண்டைதானே போனால் போகட்டும் என்று என்னை தைரியமூட்டிக்கொண்டு நனைவேன். இந்த நனைதல் நாம் மனமுவந்து ஏற்றுக்கொண்டால் தான் ருசிக்கும்.

ஒருவழியாய் அடுத்த கடையை அடைந்த போது காளான் சற்றே தணிந்தது. ஒரு தம் குடித்து டீ அடித்து மெல்ல வீடு நோக்கி நடந்தேன். வாழைப்பாதை மொத்தமும் பச்சையாய் குலுங்கிப் பூத்தது. இரு பூக்களில் இருந்து ஒரு வண்டு மெல்ல பறந்து வெளியே வந்தது. வண்டுகள் மட்டும் எப்படி காளானில் நனையாமல் பறக்கின்றன என்று பார்த்து அதைப்போல் செய்ய நினைத்தேன். பிறகு வடை வைத்தும் நனைந்த என் நிலைமை என்னை மறுபடி நிதர்சனத்திற்கு இட்டு வந்தது.

முடிவாய் வீடு வந்து சேர்ந்து ஆடை மாற்றி துணி அணிந்தேன். டிவியை போட்டு செய்திகள் கேட்ட போது காளானை பற்றியே செய்திகள் எதுவுமே வரவில்லை. ரமணன் கூட எதுவும் சொல்லாதது மிகவும் எமாற்றமளித்தது. என் மனைவிடம் கேட்ட போது அவளும் எதுவும் தெரியவில்லை என்றாள். அதைபற்றிய எண்ணங்களோடே தூங்கி விட்டேன்.

காலை எழுந்து வெளியே வந்து பார்க்கையில், பக்கத்து வீட்டு குழந்தை தேங்கி நின்ற காளான் குவியலில் விளையாடிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்தவுடன் ஓடி வந்து என் கை பிடித்து இழுத்து சென்று என் தோட்டத்தின் ஒரு மூலையை காட்டினாள்.

அங்கு அழகாய் முளைத்திருந்தது மழை, நேற்று பெய்த காளானில்!!

Advertisements

2 thoughts on “நேற்று பெய்த காளான்

  1. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காளானில் முளைத்த மழை நல்ல கற்பனை. அருமையாயிருக்கு. சில இடங்களில் மழை – மலை என்று உள்ளது.

    • அண்ணே.. மலைங்கிற அர்த்தத்துல தான் எழுதிருக்கேன். மறுவாசிப்பு ஒன்னு போடுங்க. சின்ன வித்தியாசம் தெரியும். 🙂

      பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணே..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s