Aquarium – மீன் வளர்ப்பு – My childhood memories

ரொம்ப நாள் ஆச்சு மொக்கை போட்டு. எதாச்சும் எழுதலாம்னா என்னத்த எழுதுறதுன்னு ஒரே குழப்பம். திடீர்னு என் சின்ன வயசு நண்பன் ஒருத்தனை பேஸ்புக்ல பாத்தேன். அப்போ பழங்கதைகள் ரொம்ப பேசினப்போ அதையே எழுதலாம்னு ஒரு யோசனை.

சின்ன வயசுல எனக்கு மீன் வளர்குறதுக்கு ரொம்ப ஆசை. மீன்னா ஒன்னு ரெண்டு இல்ல.. மீன் பண்னையே வைக்கணும்னு ஆசை.
எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணும்ல. அதுனால மீன் வாங்கனும்னு சொல்லி வீட்ல ஒரு பத்து ரூபா உஷார் பண்ணினோம் எல்லாரும் சேந்து.

அதுக்கு முன்னாடி இந்த மீன் மேல ஆசை வந்ததுக்கு காரணம் நான் இல்ல. எங்க அம்மா தான். மூணாப்பு படிக்கிறப்போ ரெண்டு கோல்ட் பிஷ் வாங்கிட்டு வந்து ஒரு கண்ணாடி பாட்டில்ல போட்டு என் கிட்ட குடுத்தாங்க. நம்பி குடுத்தாங்க. நானும் அந்த நம்பிக்கையை ரெண்டு நாள் காப்பத்தினேன். அதுக்கு மேல முடியல. ரெண்டு மீனும் கடவுள் கிட்ட போய்டுச்சு. ஆனாலும் ஆசை விடுமா?

நான், அந்தோணி, கோபி, கார்த்தி, மற்றும் சில நண்பர்கள் தான் மீன் வளர்க்குறதுல எக்ஸ்பெர்ட். ரிசர்வ் லயனுக்கு வீடு மாத்தி போன பிறகு சேந்த செட்டு இது. மொதல்ல மெதுவா தான் ஆரம்பிச்சோம். நான் வீட்ல திட்டேல்லாம் வாங்கி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல போய் ஒரு ரெண்டு சியாமீஸ் பைட்டர் மீன், ரெண்டு கப்பீஸ் வாங்கிட்டு வந்தேன். இவனுங்க எல்லாம் அவனவனுக்கு அமைஞ்ச காசுல ஏதோ மீன் வாங்கிட்டு வந்தாங்க..

சின்ன பாட்டில் போட்டு வச்சா அந்த மீன் என்ன தான் பண்ணும்? எல்லாம் ஒரு வாரம் தான். மொத்தமும் காலி. எல்லார் வீட்லயும் எழவு. என்ன கண்றாவி பொழப்பு டா இதுன்னு மறுபடி வீட்ல காசு உஷார். நம்ம வீட்ல தான் தெரியுமே.. பசங்க எதாச்சும் பண்ணினா ஒண்ணு ஒதைச்சு ஓரமா உட்கார வைப்பாங்க இல்லாட்டி செல்லம் குடுத்து கெடுத்துத் குட்டி சுவர் ஆக்கிடுவாங்க. எங்க வீட்ல ஒரே ஆச்சர்யம். என்னடா ஒண்ணுமே பண்ணாத பன்னாடை இப்போ ஏதோ பண்ணுதுனு ஒரே சந்தோசம். அந்த சந்தோஷமான நிலைமைல நம்ம பிட்டு நச்சுனு நங்கூரம் மாதிரி நின்னுச்சு.

பாட்டில் போய் கண்ணாடி தொட்டி வந்தது. 🙂 கூடவே கொஞ்சம் நெறைய மீனும். அதுக்கு கூடவே இன்னும் கொஞ்சம் பொறாமையும். 🙂 அவன் வீட்ல மீன் தொட்டி வாங்கி குடுத்துட்டாங்கனு சொல்லியே எல்லா பயலும் பிட் பிட்டா போட்டு மீன் தொட்டி வாங்கிடானுங்க. நெறைய மீன் நெறைய தொட்டி. அடுத்த லெவல் முன்னேரனும் ல. அப்போ தான் பந்தயம் கட்டி சண்டைக்கு விடுற விளையாட்ட நாங்க உருவாக்கினோம். ஆடுகளம் தனுஷ் எல்லாம் தரைல ஆடுவாங்க. நாங்க தண்ணி ல ஆடுனவிங்க. இந்த சியாமீஸ் ஆம்பளை மீன் இருக்கே அது இன்னொரு ஆம்பளை சியாமீஸ் மீன் கூட ஒரே பாட்டில் ல போட்ட கடிச்சு கடிச்சு சண்டை போடும்.

என்கிட்டே ஒரு பச்சை கலர் சியாமீஸ் இருந்தது. கோபி கிட்ட ஒரு சேப்பு கலர் சியாமீஸ் இருந்தது. ரெண்டும் பக்கத்து பக்கத்து பாட்டில் ல வச்சாலே செம மொறை மொறைக்கும். அஞ்சு ரூபா பெட்டு கட்டி ஒரு நாள் சண்டை விட்டோம். என் மீன் கொஞ்சம் பெருசு. கோபி மீன் ஒரு ரெண்டு கடி வாங்கிட்டு தெறிச்சு ஓடிடுச்சு. ஆனா அது கோபிக்கு பெருத்த அவமானமா போச்சு. அவன் காசெல்லாம் தேடி சேத்து வச்சு சும்மா சன் ஆப் கண் முருகன் கணக்கா ஒரு சியாமீஸ் வாங்கிட்டு வந்தான். மறுபடி சண்டை. இந்த தடவை அவமானம் எனக்கு. இப்பிடியே தோத்து தோத்து விளையாடி எங்க கிட்ட நெறைய சியாமீஸ் சேந்து போச்சு. ஜெயிச்ச மீனுக்கு மவுசு ஜாஸ்தி ஆஹி நூறு ரூபாக்கு எல்லாம் வித்தோம்.

ஆனாலும் பண்ணை வைக்கிற ஆசை விடலியே. எங்க வீட்ல கெஞ்சி கேட்டு கஷ்டப்பட்டு ஒரு சிமெண்ட் தொட்டி உஷார் பண்ணினேன். அதுல ப்ளாக் மோலி, வைட் மோலி, பலூன் மோலி, ஆரஞ்சு மோலி, கப்பீஸ், ரோசி பார்ப், டின் பாயில் னு ஏகப்பட்ட மீன் வாங்கி போட்டதுல ஒரு நாள் ஒரு மோலியும் ஒரு கப்பியும் கர்ப்பம் ஆஹிடுச்சு. போதாதா நமக்கு. அத தனியா எடுத்து பாட்டில் ல போட்டு வச்சு குட்டி போடுரப்போ லைவ் டெலிகாஸ்ட் பண்ணினேன். செம்ம ஹிட்டு. எல்லாரும் கேளம்பிட்டாங்க.

அப்டியே பெரிய மீன் பண்ணை ஓனர் மாதிரி ஒரு கெத்து. என்ன இருந்தாலும் குட்டி போட வச்சாச்சே. ஆனா வீட்ல கடுப்பாகிட்டாங்க. உருப்பட போறதில்லனு தெரிஞ்ச நிமிஷத்துல இருந்து ஒரே திட்டு. நம்ம பிசினஸ் மைன்ட் யாருக்கும் புரியல. மீன் வித்து சம்பாதிச்ச காச மீன்லையே போடுறது தப்புனு சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு நல்லத எடுத்து சொல்ல, நமக்கு துணையா இருக்க, யாருமே இல்ல. தனி மரமா நின்னு போராட வேண்டியதா போச்சு.

இப்புடியே கூத்து அடிச்சுட்டு இருந்தா என்னடா லூசுத்தனம்னு எங்க வீட்ல ஒரு நாள் என்ன அடிச்சு கூத்து கொண்டாடுனாங்க. பத்தாப்பு – பேரு லேயே ஆப்பு இருக்கு பாருங்க. இந்த பத்தாங்கிளாஸ் வந்தாலே போச்சு. படி படினு சாவடிப்பாங்க. நானும் மீன் பண்ணை வைக்க போற நான் ஏன் படிக்கணும் னு கேக்கலாம்னு தான் நெனச்சேன். அடி பலமா இருக்கும்னு தெரிஞ்சதாலே விட்டுட்டேன். அப்புறம் அந்த மீன எல்லாம் தெரு தெருவா அலைஞ்சு கூவி கூவி வித்தது இன்னொரு கதை.

இந்த பள்ளி பருவத்துக்கு அப்புறம் கூட மீன் வளக்குர ஆசை போகல. காலேஜ் வந்து கூட வளத்தேன். அது பெரிய கதை ஏதும் இல்ல. காலேஜ்ல எவன் மீன் வளப்பான்.. எல்லாவனும் காதல்ல வளத்தோம். 🙂

Advertisements

One thought on “Aquarium – மீன் வளர்ப்பு – My childhood memories

  1. பதிவுகளையெல்லாம் படிச்சேன். சூப்பர். எனக்கு ஒரு ஒரு டவுட்டு என்னான்னா என் உடன்பிறப்பு மதுரைக்காரன்னு பேர்ல எழுதுதோ? அம்புட்டுதான்பு.

    பைட்டர்ன்னு தெரியாம மத்த குட்டி மீனுங்க கூட போட்டு ஒரே மக்ல ( என் வீட்டுல முதல்ல மக்தான் தந்தாய்ங்க, அப்பறம் பக்கெட்) வளர்த்து, மீனெல்லாம் ஏன் குறைஞ்சுகிட்டே இருக்கு பூனை தூக்கிட்டு போயிருக்குமோன்னு சந்தேகப்பட்டது. அப்பறம் மீனுக்குத் தீனி போடுறோம்னு உப்புமா ரவையக் கிலோ கணக்கா காலி பண்ணி அதுக்கு சாப்பாடு போட்டே கொன்னது. அதுக்கப்பறம் மீன் வளர்ப்பு கூடாதுன்னு எங்கம்மா தடா போட்டுட்டாங்க.

    மீன் ஆசையை அடக்க முடியாம, பழைய துண்டு ஒண்ணு எடுத்துட்டு ஒரு க்ரூப்பாக் கிளம்பி கம்மாய்ல மீன் பிடிச்சு, ப்ரெண்ட் வீட்டுத் தண்ணித் தொட்டில விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். மறுவாரம் போனா அந்த எதிரி வீட்டுல அத்தனையும் மீன் கொழம்பு வச்சு சாப்பிட்டுட்டாங்க.

    இதுலயிருந்து தெரியிற நீதி என்னான்னா , சுகுணா ஸ்டோர்ஸ்லேருந்து அம்பிகா தியேட்டர் வரை இருக்குற வீடுங்கள்ல வளந்த வானரங்கலெல்லாம் க்ளோனிங் பண்ண சிட்டியாட்டம் ஒரே மாதிரி திரிஞ்சிருக்கோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s